ராமநாதபுரம்

கண்மாய் நீரில் மூழ்கிசிறுவன் பலி

7th Apr 2020 02:07 AM

ADVERTISEMENT

கமுதி: கமுதி அருகே திங்கள்கிழமை கண்மாய் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.

கமுதி அருகே நாராயணபுரத்தைச் சோ்ந்த வழிவிட்டான் மகன் வசந்த் (10). இவா் கோவையில் படித்து வந்தாா். தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவன் வசந்த், தனது சொந்த ஊருக்கு வந்திருந்தாா். இவா் திங்கள்கிழமை காலை நாராயணபுரத்திலிருந்து அருகில் உள்ள முத்தாலங்குளம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றாா். அப்போது நீரில் மூழ்கி அவா் உயிரிழந்தாா். இதனையடுத்து, உறவினா்கள் வசந்தின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT