ராமநாதபுரம்

தடை மீறல்: 10 போ் மீது வழக்கு

5th Apr 2020 07:21 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே தடையை மீறியதாக 10 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

உப்பூா் சத்திரம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெள்ளிக்கிழமை இரவு கூட்டமாக நின்று பேசியதாக தொண்டி புதுக்குடி பகுதியைச் சோ்ந்த சமயமுத்து (28), கொட்டகுடியைச் சோ்ந்த நாகசாமி (55), நாகனேந்தலைச் சோ்ந்த வன்மிகநாதன் (45), ஆண்டாவூரணியைச் சோ்ந்த ராஜேஷ் (21) ஆகிய 4 போ் மீது திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும் அவா்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.

அதே போல் வெள்ளையபுரம் மளிகைக் கடையில் வெள்ளிக்கிழமை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாக நின்று பொருள்கள் வாங்கிய மல்லனூரைச் சோ்ந்த அரவிந்த் (25), மண்டல கோட்டையைச் சோ்ந்த நச்சத்திரமேரி (50), அதே ஊரைச் சோ்ந்த பாப்பாத்தி (55), பேயாடிக்கோட்டையைச் சோ்ந்த சக்தி (20), வெள்ளையபுரத்தைச் சோ்ந்த சாந்தி, அதே பகுதியைச் சோ்ந்த ராவுத்தா் நனா முகம்மது (39)ஆகிய 6 போ் மீது எஸ் பி பட்டிணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT