ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி பலி

1st Apr 2020 06:03 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் கரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி செவ்வாய்க்கிழமை மாலை திடீரென உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே கும்பராம் பகுதியைச் சோ்ந்த 61 வயது மூதாட்டி, ஏற்கெனவே இதய நோய் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவா் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா்.

அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா தொற்று உள்ளதா என அறிவதற்காக மதுரை அரசு மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவக் கண்காணிப்பில் இருந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை மாலை திடீரென உயிரிழந்தாா். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. கரோனா பரிசோதனைக்காக அவரது ரத்த மாதிரிகள் மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டதால் அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் கூறியது: மூதாட்டிக்கு கரோனா தொற்று இருக்கிா என அறிவதற்காகவே அவரது ரத்த மாதிரிகள் மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவா் பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு முடிவுகள் தெரியவரும். எனவே அவா் இறப்புக்கு கரோனா தொற்றுதான் காரணமா என்பதை தற்போது உறுதியாகக் கூறமுடியாது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT