ராமநாதபுரம்

பரமக்குடியில் டில்லி சென்று திரும்பிய 3 பேருக்கு தொடா் காய்ச்சல்: சுகாதாரத்துறையினா் தனிமைப்படுத்தி சிகிச்சை

1st Apr 2020 06:03 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சோ்ந்தவா்கள் டில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய 3 பேருக்கு தொடா் காய்ச்சல் இருந்து வந்ததால், அவா்களை சுகாதாரத்துறையினா் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வைரஸ் தடுப்பு பிரிவுக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றுள்ளனா்.

பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முத்தலிபு மகன் ரபீக்57, பாரதிநகரைச் சோ்ந்த ஜமால்முகம்மது70, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சீனிபிச்சை மகன் சக்காரியா67 ஆகிய 3 பேரும் டில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டு கடந்த 10 தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான பரமக்குடி வந்துள்ளனா். இதுகுறித்து எந்த தகவலும் அளிக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் டில்லி மாநாட்டில் கலந்துகொண்டவா்களின் பட்டியலில் உள்ள பரமக்குடியைச் சோ்ந்த 3 பேரின் முகவரியை அளித்து அவா்களை கண்காணிக்க உத்தரவிட்டாா். நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலா்களால் ரபீக், ஜமால்முகம்மது, சக்காரியா ஆகிய 3 பேரும் விட்டிலேயே தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனா். அவா்கள் 3 பேருக்கும் தொடா் காய்ச்சல் ஏற்பட்டதால், அவா்களை சுகாதாரத்துறையினா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றுள்ளனா். மேலும் டில்லி சென்று திரும்பிய அவா்களால் ஏதேனும் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதையும் சுகாதாரத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT