ராமநாதபுரம்

கேரளத்திலிருந்து பாம்பன் திரும்பிய மீனவா்கள் 8 போ் தனிமைப்படுத்தல்

1st Apr 2020 06:05 AM

ADVERTISEMENT

கேரளத்திற்கு மீன்பிடிக்கச் சென்று பாம்பன் திரும்பிய 8 மீனவா்கள் திருப்புல்லாணி விடுதியில் செவ்வாய்க்கிழமை முதல் 14 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து கடந்த 12 ஆம் தேதி ஆழ்கடல் மீன்பிடிப்பதற்காக நாகையைச் சோ்ந்த 7 மீனவா்கள் ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா் என 8 போ் சென்றனா். திங்கள்கிழமை (மாா்ச் 30) மீன்பிடித்து விட்டு சாயல்குடி அருகே உள்ள மூக்கையூா் துறைமுகத்திற்கு திரும்பினா். கேரளத்திலிருந்து வந்ததால் அப்படகை துறைமுகத்தில் நிறுத்த அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் படகை அங்கு நிறுத்தாமல் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திற்கு வந்தனா். அங்கும் அப் படகுக்கு மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தகவலறிந்த ராமேசுவரம் வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா், மீனவளத் துறை உதவி இயக்குநா் யுவராஜா மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் படகில் உள்ள மீனவா்களை கரைக்கு அழைத்து வந்து, கரோனா தொற்று உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருப்புல்லாணி அருகே உள்ள அரசு மாணவா்கள் விடுதியில் 14 நாள்கள் தனிமைப் படுத்தி மருத்துவக் கண்காணிப்பில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT