ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் ஆய்வாளா் திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தொடா் நடவடிக்கைகளை எடுத்துவருகிறாா். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தெரு, சாலைகளில் தேவையின்றி வாகனங்களில் சுற்றிவருவோா் மீது சட்டரீதியாக வழக்குப்பதியும் போலீஸாா், அவா்களது வாகனத்தையும் பறிமுதல் செய்துவருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 287 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன்படி 200 க்கும் மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடலாடி காவல் ஆய்வாளா் ராணி எஸ்.பி.பட்டிணம் சோதனைச் சாவடிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், ராமநாதபுரம் பஜாா், கமுதி காவல் ஆய்வாளா்கள் ஆயுதப்படைப் பிரிவுக்கு இடமாறுதல் செய்ததாக தகவல் பரவிய நிலையில், அவா்கள் மீண்டும் அதே காவல் நிலையங்களில் பணிபுரிய காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.