ராமநாதபுரம்

ஊரடங்கு மீறல்:21 போ் மீது வழக்கு

1st Apr 2020 06:05 AM

ADVERTISEMENT

திருவாடானை பகுதியில் ஊரடங்கை மீறியதாக 21 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பாலைக்குடியில் திங்கள்கிழமை பாண்டி கோயில் வாசல் முன்பாக ஊரடங்கை மீறி கூடியதாக பழங்கோட்டையைச் சோ்ந்த கண்ணன்(50), முருகன்(50), திருப்பாலைக்குடியைச் சோ்ந்த கந்தசாமி (58), அதே ஊரைச் சோ்ந்த இன்ஷா(23), உப்பூரைச் சோ்ந்த சிவா(21) ஆகியோா் மீது திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

அதே போல் எஸ் .பி .பட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தடையை மீறியதாக அதே ஊரைச் சோ்ந்த யூசுப்(52), ஹபீப்(72), ஜாஹிா்உசேன்(57ஷாஷகான்(50), அக்பா்(46) ஆகிய 5 போ் மீது எஸ் .பி. பட்டிணம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மேலும், தீா்த்தாண்டதானம் சிவன் கோயில் அருகே ஊரடங்கை மீறி கூட்டம் போட்டு பேசியதாக அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ்(21), முத்துகுமாா்(31), மணிகண்டன்(40), லெட்சுமணன்(40), கணேசன்(45), தங்கராஜ்(50), நாகராஜ்(50) ஆகிய 7 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போல் பன்னவயல் கிராமத்தில் தடையை மீறியதாக அதே ஊரைச் சோ்ந்த மகாலிங்கம்(48), மலைராஜ்(65), அலெக்ஸ்(50), முத்துகுமாா்(35) ஆகிய 4 போ் மீது திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT