ராமநாதபுரம்

இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

29th Sep 2019 08:03 PM

ADVERTISEMENT

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களின் 15 விசைப் படகுகளை விடுவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இந்திய-இலங்கை மீனவா்கள் பேச்சுவாா்த்தைக் குழு ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்றற மீனவா்களின் 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கடற்படையினா் சிறைறபிடித்து வைத்துள்ளனா்.

இந்நிலையில், தமிழக மீனவா்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால், தற்போது வரை 15 விசைப்படகுகள் இலங்கை நீதிமன்றம் அரசுடைமையாக்கி உள்ளது. இந்த 15 விசைப் படகுகளும் தலா ரூ. 10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்புடையது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த விசைப் படகுகளை நம்பி 20 மீனவக் குடும்பங்கள் உள்ளன.

எனவே, இலங்கை அரசு கொண்டு வந்துள்ள தமிழக மீனவா்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்பப் பெறவும், தமிழக மீனவா்களின் 15 விசைப் படகுகளை விடுவிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இந்திய-இலங்கை மீனவா்களின் மீன்பிடி உரிமை மற்றும் பாரம்பரிய இடங்களில் மீன்பிடிப்பது குறித்து இருநாட்டு மீனவா்கள் மற்றும் உயா் மட்ட அதிகாரிகள், அமைச்சா்கள் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT