ராமநாதபுரம்

தொண்டி பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

22nd Sep 2019 12:25 AM

ADVERTISEMENT


திருவாடானை அருகே தொண்டியில்  இஸ்லாமிக் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
மழைக்காலம் வந்து விட்டதால் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து தொண்டி  இஸ்லாமிக் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு  வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் முதன்மை மேலாளர் சகுபர் சாதிக், முதல்வர் விருத்தாச்சலம் பூபதி, பள்ளி நிர்வாக மேலாளர் மோகன், அலுவலக பணியாளர்கள் தஸ்தகீர், பயாஸ், ரசூல், ரஸியா பேகம், தீபா, நூர்ஜஹான் ஆகியோர் கலந்து கொண்டு  மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT