ராமநாதபுரம்

படகு மூழ்கிய சம்பவம்: மீட்கப்பட்ட 6 மீனவர்களுக்கு நிதியுதவி

17th Sep 2019 07:25 AM

ADVERTISEMENT

படகு மூழ்கிய சம்பவத்தில்  மீட்கப்பட்ட 6 ராமேசுவரம் மீனவர்களுக்கு  தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகையை முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டன் திங்கள்கிழமை வழங்கினார். 
ராமேசுவரம் நடராஜபுரம் மீனவர் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கடலூர் பகுதிக்கு நாட்டுப்படகு வாங்க சென்றனர். படகை வாங்கி விட்டு அங்கிருந்து கடல் வழியாக ராமேசுவரத்திற்கு கடந்த 3 ஆம் தேதி புறப்பட்டு வரும் போது படகு கடலில் மூழ்கியது. இதில் நான்கு மீனவர்கள் உயிரிழந்தனர். 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.  இந்நிலையில், உயிரிழந்த மீனவர்கள் நான்கு பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் நிதியை தகவல் தொழில் நுட்பத்துறை முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டன் கடந்த வாரம் வழங்கினர். 
இதனையடுத்து, மீட்கப்பட்ட 6 மீனவர்களின் குடும்பத்தினரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து அறுதல் கூறியதுடன் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 60 ஆயிரம் சொந்த நிதியை மணிகண்டன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நகரச் செயலாளர் கே.கே.அர்ச்சுனன், அவைத்தலைவர் குணசேகரன்,பொருளாளர் தர்மர், ஜெயலலிதா பேரவை செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT