கமுதி அருகே பவானி அம்மன், சக்திகணபதி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் அமைந்துள்ள பவானி அம்மன், சக்தி கணபதி மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலயத் திருப்பணிக்குழுவினர் பாலமுருகன், முத்துவேல் உள்ளிட்டோர் செய்தனர்.