ராமநாதபுரம்

ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

10th Sep 2019 10:21 AM

ADVERTISEMENT

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர், முல்லை நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஜெயராமன்(60). இவர், தனது தாயார் பொன்னுத்தாயி, சின்னமனூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி மாரீஸ்வரி (48) ஆகியோரை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சின்னமனூரில் இருந்து கோட்டூர் நோக்கிச் சென்றுள்ளார். 
கோட்டூர் அருகே தேனி-கம்பம் சாலையில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த பொன்னுத்தாய், மாரீஸ்வரி ஆகியோர் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், மாரீஸ்வரி வழியிலேயே உயிரிழந்தார். பொன்னுத்தாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT