ராமநாதபுரம்

ராமநாதபுரம், கமுதியில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 02:17 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம், கமுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோஅமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் எமர்சன், தமிழக தமிழாசிரியர் கூட்டணி மாவட்ட அமைப்பாளர் மு.க.குமாரவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் எஸ்.முனியசாமி ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில், தேசிய புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யவேண்டும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 
முன்னதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் சோ.முருகேசன் வரவேற்றார். 
இதில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் லாரன்ஸ், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் தர்மராஜ், தலைமை ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் மோகன்தாஸ், பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் சரவணன், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   
கமுதி : கமுதி அருகே கோட்டைமேட்டில் வட்டாட்சியர் அலுவகத்தில் கமுதி வட்டார  ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், தொடக்கப் பள்ளி 
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்  மாவட்ட செயலர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். இதில் பெண்கள் உள்பட 50 -க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT