ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் இன்றும், நாளையும் தட்டச்சுத் தேர்வு

7th Sep 2019 02:19 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தொழில்நுட்ப இயக்ககத்தால் நடத்தப்படும் தட்டச்சுத் தேர்வுகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகின்றன. 
   ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க செயலாளர் சரவண பவா கூறியது: அரசு தொழில்நுட்ப இயக்ககத்தால் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் சனிக்கிழமை தொடங்குகிறது. 
மாவட்டத்தில் ராமநாதபுரம் ராஜா அரசு மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை இளநிலை மூன்று பிரிவுகளாகவும், முதுநிலை இரண்டு பிரிவுகளாகவும் தேர்வு நடக்கிறது. 
ஞாயிற்றுக்கிழமை (செப்.8) முதுநிலை இரண்டு பிரிவுகளாகவும், இளநிலை இரண்டு பிரிவுகளாகவும் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500-க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT