ராமநாதபுரம்

மனைவி எரித்துக் கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

7th Sep 2019 02:19 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பகுதியில் உள்ள உடையனாதபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (29). இவரது மனைவி சண்முகசுந்தரி (24). இவர்களுக்கு மகள் உள்ளார். கூலித் தொழிலாளியான சதீஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  கடந்த 2012 ஜனவரியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், சண்முகசுந்தரி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து அபிராமம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து சதீஷ்குமாரை கைது செய்தனர். 
இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT