ராமநாதபுரம்

மதுரையில் வழிபட்ட விநாயகர் சிலைகள் ராமேசுவரம் கடலில் கரைப்பு

7th Sep 2019 02:15 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரையில்  பிரதிஷ்டை செய்யப்பட்ட 500 -க்கும் மேற்பட்ட சிலைகள் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கரை கடலில் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன. 
மதுரை கிருஷ்ணபுரம் 1 ஆவது தெருவைச் சேர்ந்த அரசமர விநாயகர் சதுர்த்தி சங்கம் சார்பில் 24 ஆம் ஆண்டு விழாவையொட்டி கடந்த 2 ஆம் தேதி 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.  இந்த சிலைக்கு 4 நாள்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து 5 அடி உயரமுள்ள சிலை மற்றும் வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகள் உள்பட 500 -க்கும் மேற்பட்ட சிலைகள் வெள்ளிக்கிழமை காலையில் லாரி மூலம் ராமேசுவரம் எடுத்து வரப்பட்டது.  மாலையில் அக்னி தீர்த்த கரைப்பகுதியில் உள்ள கடலில் கரைக்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பி.கே.கணநாதன், ஜெ.ஆர்.குமரன் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT