ராமநாதபுரம்

பி.முத்துராமலிங்கபுரத்தில் "அம்மா' திட்ட முகாம்

7th Sep 2019 02:13 AM

ADVERTISEMENT

கமுதி பெருநாழி அருகே பி.முத்துராமலிங்கபுரத்தில் அம்மா திட்ட முகாம் வட்டாட்சியர் மீனலோசனி தலைமையிலும், மண்டல துணை வட்டாட்சியர் ராமசாமி முன்னிலையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 முகாமில் இலவச ஆடுகள் கோரி 37, முதியோர் உதவித் தொகை கோரி 2, பள்ளி சுற்றுச்சுவர், பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை கோரி 3 மனுக்கள் என 42 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்கள் மீது, 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாட்சியர் மீனலோசனி தெரிவித்தார். முன்னதாக  வருவாய் ஆய்வாளர் ரமேஷ் வரவேற்றார். முகாமில் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT