ராமநாதபுரம்

திரெளபதி அம்மன் கோயில் திருக்கல்யாண உற்சவ விழா

7th Sep 2019 02:16 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் வடக்குத்தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் பூக்குழி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இத் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31 ஆம் தேதி காப்புக் கட்டு நடைபெற்றது. தொடர்ந்து 3 ஆம் தேதி பூங்கரகம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை முக்கிய நிகழ்ச்சியாக திரெளபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையடுத்து உற்சவ திரெளபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பட்டுசேலை அணிவித்து  அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை மாற்றுதல், நலுங்கு சடங்கு  நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தாலி கயிறு, மஞ்சள் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. 
விழாவில் ஞாயிற்றுக்கிழமை தபசுநிலை, 10 ஆம் தேதி கீசகவதம், 12 ஆம் தேதி அரவான் களப்பலி, 13 ஆம் தேதி திருவிளக்கு பூஜை, 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பூவளர்த்தல், அன்று இரவு 10 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT