ராமநாதபுரம்

சாயல்குடி ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

7th Sep 2019 02:12 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் முக்குலத்தோர் தேவர் உறவின்முறை சார்பில் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. விழாவிற்கு டி.எம்.கோட்டை வெங்கடேஷ்குருக்கள் தலைமை வகித்தார். விழாக் குழு தலைவர் கருப்பையா, செயலர் வில்வலிங்கம், பொருளாளர் ஆசிரியர் சுந்தரராஜ், ஆகியோர் செய்திருந்தனர். விழாவினை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனைகள் பல்வேறு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT