ராமநாதபுரம்

காவலரை மிரட்டியதாக 3 பேர் மீது வழக்கு

7th Sep 2019 02:13 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகே காவலரை மிரட்டியதாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் ராஜா. இவர் ஹலோ போலீஸ் பிரிவில் பணிபுரிகிறார். கடந்த 4 ஆம் தேதி புதன்கிழமை இளமனூர் பகுதியில் இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து ராஜா அங்கே சென்றுள்ளார். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய காவலர் ராஜாவிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 
இதுகுறித்து காவலர் நாகையா அளித்த புகாரின் பேரில் இளமனூரைச் சேர்ந்த மாதவன், முனியசாமி, பழனி ஆகியோர் மீது கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT