ராமநாதபுரம்

கடற்கரையில் குவிந்து கிடக்கும் கடற்பாசி கழிவுகளால் சுகாதாரக் கேடு: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

7th Sep 2019 02:21 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம்,  தொண்டி அருகே சுற்றுலா மையமான காரங்காடு கடற்கரையில் குவிந்து கிடக்கும் கடற்பாசி கழிவுகளால் மாசடைந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் அழகிய சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. கடற்கரையில் ஆற்றின் முகத்துவாரத்தில்அமைந்துள்ள இந்த சதுப்புநில காடுகளில் பறவைகள், நீந்தி செல்லும்  மீன்களை கண்டு ரசிக்கலாம். கடல் அழகை ரசிக்கும் வகையில் உயர் காட்சி கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. 
இதனால் இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடலில் சென்று சதுப்பு நில காடுகளை சுற்றிப் பார்க்கும் வகையில் வனத்துறையினர் சார்பில் இரு படகுகளும், ஒருவர், இருவர் செல்லக் கூடிய படகுகளும் இயக்கப்படுகின்றன. 
இக்கடற்கரையில் கடல் பாசி ஒதுங்குவதாலும், இரவில் இப்பகுதி மக்கள் கடற்கரையை  திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதாலும் மாசடைந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.  இதனால், காலை, மாலை நேரங்களில் கடற்கரையில் அமர முடியாத வகையில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. 
எனவே கடற்கரையை தூய்மையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT