ராமநாதபுரம்

வட்டார தடகளப் போட்டி  புலியூர் பள்ளி 2 ஆம் இடம்

4th Sep 2019 07:46 AM

ADVERTISEMENT

வட்டார தடகளப் போட்டியில் புலியூர் கிரியேட்டிவ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 2 ஆவது இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர், ஆசிரியர்கள் சனிக்கிழமை பாராட்டினர்.
   திருவாடானை அருகே ஆண்டாவூரணி சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவில் தடகளப் போட்டி கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. இதில் தொண்டி திருவாடானை, சி .கே. மங்கலம், ஓரியூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. போட்டியில் புலியூர் கிரியேட்டிவ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மொத்த புள்ளி வரிசையில் 2 ஆவது இடத்தைப் பிடித்தனர். 
    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் சார்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் பாண்டி, சுரேஷ், விஜய தீபா ஆகியோரும் பள்ளித் தாளாளர் சண்முகம் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகளும் சனிக்கிழமை பாராட்டினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT