ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவுக்கு நோயாளிகள் வருகை அதிகரிப்பு

4th Sep 2019 07:48 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள சித்தா பிரிவில் சிகிச்சை பெற ஏராளமான நோயாளிகள் வருவதாக, மாவட்ட மலேரியா (பொறுப்பு)அலுவலர் டாக்டர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 
      இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்களை குணமாக்கும் என்ற நம்பிக்கை மட்டுமல்லாது,  பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதாலேயே, சித்தா பிரிவுக்கு ஏராளமானோர் சிகிச்சை பெற வருகின்றனர். 
      வடகிழக்குப் பருவமழையானது விரைவில் தொடங்கும் என்பதால், அதனால் ஏற்படும் நோய் பாதிப்புகளை தடுக்கும் வகையில், சித்தா பிரிவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு நிலவேம்பு கசாயம் சிறந்த மருந்தாகும். ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடற்கரை பகுதியாக இருப்பதாலும், கடல் உணவுகளை மக்கள் அதிகம் உண்பதாலும் ஒவ்வாமை, தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. 
       முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாததால் 40 வயதிலேயே ஏராளமானோர் மூட்டுவலி பாதிப்புக்குள்ளாகின்றனர். அதனடிப்படையில், ராமநாதபுரம் நகரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மட்டும் மாதந்தோறும் 5 ஆயிரம் பேர் மூட்டு வலிக்கான சிகிச்சை பெற வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்கால காய்ச்சல் உள்ளிட்டவற்றாலும் மூட்டு வலி ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடையலாம் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT