ராமநாதபுரம்

புத்தேந்தல் மனநலக் காப்பக மறுவாழ்வு மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

4th Sep 2019 07:46 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகேயுள்ள புத்தேந்தல் பகுதியில் செஞ்சோலை மனநலக் காப்பகத்தில் மறுவாழ்வு மையத்துக்கான புதிய அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  
       புத்தேந்தல் பகுதியில் செஞ்சோலை மனநலக் காப்பகத்தில் ஏராளமானோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களது மறுவாழ்வுக்கான புதிய கட்டடமானது கட்டப்படவுள்ளது.
     இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில்,  மாவட்ட மனநல அலுவலர் டாக்டர் ஜெ. பெரியார் லெனின் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. நவாஸ்கனி தலைமை வகித்து, புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இதில், ஆதித்யசேக்கிழார், நஸ்ருதீன், ஜாபர், யோகா மாஸ்டர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் ராமேசுவரம் பகுதி மீனவரணி தலைவர் ஆர். செந்தில்வேல், புத்தேந்தல் வே. பூமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, க. நாகேஸ்வரன் வரவேற்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT