ராமநாதபுரம்

பரமக்குடியில் திமுக செயற்குழு  ஆலோசனைக் கூட்டம்

4th Sep 2019 07:47 AM

ADVERTISEMENT

பரமக்குடியில் தனியார் மண்டபத்தில், மாவட்ட திமுக சார்பில் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
      இக்கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் காதர்பாட்சா வி. முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர் சுப.த. திவாகர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உ. திசைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
     கூட்டத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்து வேறுபாடின்றி பாடுபட வேண்டும். செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்தின் போது அஞ்சலி செலுத்த வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     இதில், நகர், ஒன்றிய கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, நகர் செயலர் சேது. கருணாநிதி வரவேற்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT