ராமநாதபுரம்

திருவாடானை முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் விழா

4th Sep 2019 07:45 AM

ADVERTISEMENT

திருவாடானையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 
     இக்கோயிலில் கடந்த 28ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 9 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
     முக்கிய நிகழ்ச்சியான தீச்சட்டி ஊர்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அம்மனுக்கு பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்தனர்.
          திருவிழாவின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, பக்தர்கள் மயில் காவடி, பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்து, கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT