ராமநாதபுரம்

கிராமத்தில் இரு தரப்பினர் மோதல்: 35 பேர் மீது வழக்கு

4th Sep 2019 07:47 AM

ADVERTISEMENT

கமுதி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, 35 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். 
     கமுதி, அபிராமம் குரூப் கிராம உதவியாளர் மீனாட்சிசுந்தரம் வீட்டு திருமண நிகழ்ச்சி திங்கள்கிழமை பள்ளபச்சேரி முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. அன்று மாலை, வரவேற்பு நிகழ்ச்சி பள்ளபச்சேரி கிராமத்தில் நடைபெற்றது. அப்போது, மேலராமநதியைச் சேர்ந்த சிலர், அங்குள்ள துக்க வீட்டுக்கு வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது, அக்கிராமத்தினருக்கு வழிவிடாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. 
     இதனால், மேலராமநதியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் பள்ளபச்சேரியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பள்ளபச்சேரியை சேர்ந்த ஆனந்தகுமார்,  ராமன், கோவிந்தராஜ், இந்திரபிரசாத் ஆகியோர் காயமடைந்தனர்.
      இது குறித்து பள்ளபச்சேரியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், மேலராமநதியைச் சேர்ந்த 30 பேர் மீதும், மேலராமநதியைச் சேர்ந்த மனோஜ்கௌதம் அளித்த புகாரின்பேரில், பள்ளபச்சேரியைச் சேர்ந்த பிரதாப் உள்பட 5 பேர் மீதும் அபிராமம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT