ராமநாதபுரம்

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓவிய ஆசிரியர் மீது வழக்கு

4th Sep 2019 07:48 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூர் அருகே கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, அப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் மீது, போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
      கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் சபுரா காதர்அம்மாள் (32).  அதே பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுபவர் விஸ்வநாதன் (53). இந்நிலையில், பள்ளி வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சைகையால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மாணவர்கள் முன்னிலையில்  தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், சபுரா காதர்அம்மாள்அளித்த புகாரின்பேரில், கடலாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT