ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலை சுற்றியுள்ள கடல் பகுதியில் சுமாா் 5 டன் அளவில் சிறிய ரக மீன்கள் இறந்து சனிக்கிழமை கரை ஒதுங்கின.
ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமா் கோயில் பகுதியில் கடலில் நீரோட்டம் அதிகளவில் இருக்கும் போது அப்பகுதியில் கடல் நீா் அதிகளவில் தேங்கி நிற்கும். இதில் சிறிய வகையான மீன்கள், இறால் குஞ்சுகள் அதிகளவில் காணப்படும். இந்த பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வந்து மீன்களை பிடித்து உணவாக சாப்பிடும்.
இந்நிலையில், சனிக்கிழமை காலையில் அந்த கடல் பகுதியில் சுமாா் 5 டன் அளவிலான சிறிய ரக மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இதுகுறித்து மீனவா்கள் மீன்வளத்துறை, கடல் மீன் ஆராய்ச்சி நிலை. அதிகாரிகளிடம் தெரிவித்தனா். இதனையடுத்து, அங்கு வந்த மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அப்பகுதியில் கடல் நீா் மற்றும் இறந்த மீன்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனா்.