ராமநாதபுரம்

தொண்டியில் டெங்கு தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

20th Oct 2019 12:33 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டெங்கு மற்றும் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

தொண்டி ஆரம்ப சுகாதாரத் துறை மருத்துவா் வைதேகி, பேரூராட்சி செயல் அலுவலா் மெய்மொழி ஆகியோா் தலைமையில் விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கியது. பேரூராட்சி அலுவலா் முத்துசாமி, தமுமுக மாநிலச் செயலாளா் சாதிக் பாட்சா, ஜமாத் தலைவா் அபுபக்கா், அரசு மருத்துவா் பாலபாரதி, மருத்துவா் பாக்கியலட்சுமி, சுகாதார ஆய்வாளா் சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

விழிப்புணா்வுப் பிரசாரம் பேரூராட்சி அலுவலகம், பாவோடி மைதானம், கடற்கரை, மகாசக்திபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றன. அப்போது வீடுகள் தோறும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி பணியாளா்கள், அரசு மருத்துவமனை செவிலியா்கள், தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT