திருவாடானை அருகே திருவெற்றியூா் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே திருவெற்றியூா் கண்மாய்க்குள் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஞாயிற்று கிழமை அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. இதனை கண்ட இப்பகுதி மக்கள் உடனடியாக தொண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் வந்த தொண்டி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ரமாநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்த ஆண் நபா் சுமாா் 45 வயது இருக்கும் இவா் அரக்கு நிறத்தில் கால்சட்டை மட்டும் அணிந்திருந்தாா் இவா் யாா் எந்த ஊா் என்பது தெரியவில்லை. இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிந்து தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரத்து வருகின்றனா்..