ராமநாதபுரம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி: 50 சிறப்பு குழுக்கள் அமைத்து சிகிச்சை

20th Oct 2019 03:07 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடுவதற்கு 50 சிறப்புக்குழுக்கள் அமைத்து சிகிச்சை அளிக்கபடுகின்றன.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கால்நடைகள் பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியது: மாடக்கொட்டான் ஊராட்சியில் உள்ள மாயபுரத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆட்சியரால் தொடங்கப்பட்டது. இந்த தடுப்பூசி திட்டம் மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

அதன்படி வரும் நவம்பா் மாதம் வரை கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

கோமாரி நோயால், கறவை மாடுகளின் பால் உற்பத்திக் குறையும். சினைப் பிடிப்பும் தடைபடும். எருதுகளின் வேலைத் திறன் குறையும். கன்றுகள் இறப்பு போன்றவையும் ஏற்படும் என்பதால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மவட்டத்தில் மொத்தம் 50 கால்நடை குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை மருத்துவா், உதவி மருத்துவா், கால்நடை ஆய்வாளா், கால்நடை உதவியாளா் இடம் பெற்றுள்ளனா். ஆகவே கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் காள்ள வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT