ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே பாட்டியை கத்தியால் குத்திய பேரன் கைது

16th Oct 2019 08:02 PM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூரில் பாட்டியை கத்தியால் குத்திய பேரனை இன்று போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் பிரபுதேவன்(29) என்பவா் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு குடும்பத்தினரை மிரட்டுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் இருந்த தனது பாட்டி குஞ்சரம் (71) என்பவரிடம் பிரபுதேவன் தகராறு செய்த போது மறைத்து வைத்திருந்த கத்தியைக்கொண்டு பாட்டியைக்குத்தியதில் பாட்டி காயமடைந்து முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.

இது குறித்து இளஞ்செம்பூா் காவல்நிலையத்தில் குஞ்சரம் கொடுத்த புகாரின் பேரில் பிரபுதேவனை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT