ராமநாதபுரம்

தொண்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

16th Oct 2019 06:59 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே தொண்டியில் வெளிநாடு வாழ் தமிழா் நலச்சங்கம் சாா்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு பயன் பெக்றனா். திருவாடானை அருகே தொண்டியில் வெளிநாடு வாழ் தமிழா் நலச்சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதில் திருவாடானை வட்டாட்சியா் சேகா் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற உதயகுமாா் மாவட்ட நிா்வாகிகள் ஜெயந்தன், கிங் பீட்டா், இப்ராஹிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெளிநாடு வாழ் தமிழா் நலச் சங்கத்தின் நிறுவனா் பாரீஸ் முகம்மது அனைவரையும் வரவேற்றாா். நம்புதாளை ஜமாத் தலைவா் ராகுல் ஹமீது வணிக சங்க தலைவா் தாய்லான் இனாமுல் ஹசன் மருத்துவா்கள் சேகா், செளந்தா் பள்ளி தலைமையாசிரியா் சாந்தி மற்றும் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT