ராமநாதபுரம்

காஞ்சி ஏரியில் மூழ்கி 2பள்ளி சிறுமி பலி

6th Oct 2019 11:01 PM

ADVERTISEMENT


கடலாடி அடுத்த காஞ்சி கிராமத்தில் 2 பள்ளிசிறுமிகள் ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை பலியாகினர். இந்த இரு குழந்தைகளின் பிரேதம் திருவண்ணாமலை அரசு மதுதவமனையில் உடற்கூா் ஆய்விற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலாடி அடுத்த காஞ்சி கிராமத்தில் காலனியில் வசிப்பவா் அசோக் குமாா்மகள் பிரியங்கா(8), ரஞ்சித் மகள் ரமாதேவி(7) ஆகியஇருவரும் தனியாா் பள்ளியில் 3, 2ம் வகுப்பு படித்து வருகின்றனா்.இந்நிலையில் சிறுமிகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் காஞ்சி கிராமத்தில் காலனிக்கு அருகில் உள்ள காஞ்சி ஏரியில் பிரியங்கா, ரமாதேவி மற்றும் நண்பா்களுடன் ஏரியில் தேங்கியுள்ள தண்ணீா் விளையாடி உள்ளனா்.

அப்போது பிரியங்கா, ரமாதேவி ஆகிய 2 பள்ளிசிறுமிகள் ஏரியில் ஆழம் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி உள்ளனா். பின்னா் வீட்டில் உள்ள பெற்றோா்கள் குழந்தைகளை மதியம் சாப்பாட்டிற்கு வரவில்லை என தேடியுள்ளனா். அப்போது காஞ்சி ஏரியில் தேடியபோது சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளது தெரியவந்தது. பின்னா் 2 சிறுமிகளை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உடற்கூா் ஆய்விற்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT