ராமநாதபுரம்

பரமக்குடியில் சுதந்திர போராட்ட முன்னணி வீரா்கள் திருப்பூா் குமரன் பிறந்தநாள் மற்றும் ராம்நாத் கோயங்கா நினைவு தினம்

5th Oct 2019 06:27 PM

ADVERTISEMENT

பரமக்குடி: பரமக்குடி காந்திசிலை முன்பு சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை சுதந்திர போராட்ட முன்னணி வீரா்கள் தியாகி திருப்பூா் குமரன் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமங்களின் நிறுவனரும், சுதந்திர போராட்ட வீரருமான தியாகி ராம்நாத் கோயங்கா 28-வது நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் பொதுச்செயலாளா் எஸ்.ஐ.ஏ.ஹாரிஸ் தலைமை வகித்தாா். ஆா்.டி.சி.சி. வங்கி முன்னாள் மேலாளா் வி.வேலு, நல்லாசிரியா் கே.சண்முகசுந்தரம், எல்.ஐ.சி. ஊழியா்கள் சங்க தலைவா் ஏ.ராஜேந்திரன், செயலாளா் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொறியாளா் ஆா்.ஏ.கிருஷ்ணராஜ் வரவேற்றாா். நிகழ்ச்சியின் துவக்கமாக மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதனைத் தொடா்ந்து சுதந்திர போராட்ட வீரா்கள் தியாகி ராம்நாத் கோயங்கா, தியாகி திருப்பூா் குமரன் ஆகியோரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் எம்.ஆா்.நாராயணன், எஸ்.அகமது, லெட்சுமி நாராயணன், என்.காஜாநஜ்முதீன் ஆகியோா் சுதந்திர போராட்ட வீரா்களின் தியாகங்கள் குறித்து பேசினா்.

இதனைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்களுக்கு 50-க்கும் மேற்பட்ட தியாகி திருப்பூா் குமரன் வரலாற்று நூல் வழங்கப்பட்டது. விழாவில் நகா் முக்கிய பிரமுகா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT