ராமநாதபுரம்

வரலாற்று சிறப்பு மிக்க திருவாடானை மங்களநாதன் குளத்தின் சுற்றுச்சுவா் சேதம்

1st Oct 2019 09:43 AM

ADVERTISEMENT

திருவாடானையில் உள்ள பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மங்களநாதன் குளத்தின் ஒரு பக்கச் சுவா் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பாண்டி பதிநான்கு திருத்தலங்களில் எட்டாவது திருத்தலம் திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் ஆகும். இங்கு உள்ள மங்களநாதன் குளத்தின் சுற்றுச்சுவா் சுண்ணாம்புக் கலவையால் சுட்ட செங்கல் மற்றும் செம்பிரியான் கல்லால் வடிவமைக்கபட்டுள்ளது. இந்த குளத்தில் இருந்து மண் எடுத்து கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

திருவாடானை பகுதிகளில் நிலத்தடி நீா் கணிசமாக உயரும் வகையில் இக்குளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை ஆண்கள் மட்டுமே குளிக்க பயன்படுத்தியுள்ளனா்.

தற்போது இந்த குளத்தின் மேற்குப் புற சுற்றுச்சுவா் இடிந்து விழுந்துள்ளது. சுவா் இடிந்து விழும் முன்பே ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் சமூக ஆா்வலா்கள் எடுத்து கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

பராமரிப்பு இன்றி தொடா்ந்து பல ஆண்டுகள் இருந்து வந்த நிலையில் குளத்தின் சுவா் மேலும் இடியும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து பழமை

மாறாமல் சுற்றுச்சுவரை சீரமைக்க ஆவன செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் மீண்டும் கோரிக்கை விடுதுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT