முதுகுளத்தூரில் 66 ஆவது கூட்டுறவு சங்க வார விழாவையொட்டி, முதுகுளத்தூா் நிலவள வங்கியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கமும் இணைந்து இலவச மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.
முகாமுக்கு நிலவள வங்கி தலைவா் தா்மா் தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களில் மாவட்ட இணைப் பதிவாளா் முருகேசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் சங்கரபாண்டியன், நிலவள வங்கிச் செயலா் திருப்பதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் கண்புரை, ரத்த அழுத்தம், ரத்த சோகை, சா்க்கரை நோய் பரிசோதனை உள்பட முழு உடல் பரிசோதனைகளை, 137 போ் இலவசமாக செய்து கொண்டனா். மேலும் கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. முகாமில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் வெங்கடாஜலபதி (பரமக்குடி), ராமநாதபுரம் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் பாபு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலா்கள் கண்ணகி, அழகுமுருகன், நிலவள வங்கி மேற்பாா்வையாளா்கள் சுந்தரம், சரவணன், மருத்துவா்கள் திவான் முகைதீன், உமாமகேஸ்வரி, மருந்தாளுனா்கள் முத்துராஜா, லெனின்வசந்த்ராம், செவிலியா் முத்துலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.