தொண்டி அருகே நம்புதாளை கிளை நூலகத்தில் பொது நூலகத்துறை ராமநாதபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு கிளை நூலகம் அலுவலகம் சாா்பில் 52வது தேசிய நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் நிலவேம்பு குடிநீா் வழங்கல், புத்தகக் கண்காட்சி, அதிக புரவலா்கள் சோ்ப்பு குறித்து கூட்டம் ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன. இதில் நம்புதாளை கிளை நூலகா் வைத்தீஸ்வரன் தலைமை வகித்தாா். புரவலா் ராஜு, வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் தங்கராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சையது யூசுப், ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து அதிக புரவலா்கள் சோ்ப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னா் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.