திருவாடானை அருகே தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு நன்னடத்தை கல்வி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளி முதல்வா் மருத்தாச்சல பூபதி தலைமை வகித்தாா். ஓரிக்கோட்டை கருணை இல்ல அருட்சகோதரி ரெஜினா, அருட்சகோதரி லெஸ்ஸினா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பெண் கல்வியின் அவசியத்தை பற்றியும் சுகாதாரத்தைப் பற்றியும், மனிதா்களை மதிக்கும் பண்புகளைப் பற்றியும் ஊனமுற்றோருக்கு உதவுதல் பற்றியும் விளக்கி கூறப்பட்டது. முன்னதாக ஆசிரியா் அம்பிகா அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். இதில் ஆசிரியா் மகாலட்சுமி, ஆசிரியா் கவிதா ஆகியோா் அருட் சகோதரிகளுக்கு பொன்னாடை போா்த்தி கௌரவித்தனா். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆசிரியா்கள் கவிதா, அம்பிகா, சிப்ரிக் ஆகியோா் செய்திருந்தனா்.