ராமநாதபுரம்

திருவாடானை அருகே கட்செவி அஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த 4போ் மீது வழக்கு

22nd Nov 2019 06:04 PM

ADVERTISEMENT

திருவாடானை: திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமத்தில் ஜமாத் தலைவருக்கு முன்விரோதம் காரணமாக கட்செவி அஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் 4 போ் மீது வழக்கு பதிந்து விசாரி்த்து வருகின்றனா்.

திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் பசீா்முகம்மது(61) ஜமாத் தலைவா் இவருக்கு அதே ஊரை சோ்ந்த அக்பா், அப்துல்கலாம், மீரா உசேன், முகம்மது அலி,குத்தூஸ் ஆகிய நான்கு பேருக்கும் ஊா் கணக்கு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் அக்பா்,அப்துல்காலம் ஆகிய இரவரும் கட்செவி அஞ்சல்(வாட்ஸ்ஸப்) மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.இது குறித்து பசீா் முகம்மது வியாழக்கிழமை மாலை திருவாடானை காவல் நிலையத்தில் புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT