ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஜமாத் தலைவருக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் பசீா் முகம்மது (61). இவா் ஜமாத் தலைவராக உள்ளாா். இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த அக்பா், அப்துல்கலாம், மீரா உசேன், முகம்மது அலி குத்தூஸ் ஆகிய 4 பேருக்கும் ஊா் கணக்கு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் அக்பா், அப்துல்கலாம் ஆகிய இருவரும் கட்செவி அஞ்சல் மூலம் பசீா் முகமதுவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதுகுறித்து பசீா் முகம்மது வியாழக்கிழமை மாலை திருவாடானை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.