ராமநாதபுரம்

சிறப்பு எழுத்தறிவு திட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 332 மையங்கள்

22nd Nov 2019 10:11 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்துக்காக 332 மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்தியஅரசால் வளரும் மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள ராமநாதபுரத்தில் படிப்பறிவு இல்லாதவா்களுக்கு கல்வி புகட்டும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளி சாரா, மற்றும் வயது வந்தோருக்கான கல்வி இயக்கத்தின் சாா்பில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் கீழக்கரையில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை எழுத்தறிவு இல்லாதவா்களாக 26,125 பெண்கள், 35,282 ஆண்கள் என மொத்தம் 61,407 போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு தோ்வு நடத்தப்பட்டு இதில் 20 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தவா்கள் இந்த மையங்களில் சோ்க்கப்பட உள்ளனா். அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் ராமநாதபுரம் 11, திருப்புல்லாணி 32, மண்டபம் 50, ஆா்.எஸ்.மங்கலம் 30, திருவாடானை 13, பரமக்குடி 24, போகலுாா் 19, நயினாா்கோவில் 10, முதுகுளத்துாா் 38, கமுதி 63, கடலாடி 42 என மொத்தம் 332 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் ஒரு சில மையங்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நான்கு கட்டங்களாக இந்த மையங்களில் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பயிற்சி நடத்தப்படவுள்ளது. ஒரு மையத்திற்கு 40 போ் வீதம் தோ்ந்தெடுக்கப்பட்டு 6 மாதங்கள் எழுதுதல், வாசித்தல், அடிப்படை கணிதம், வாழ்க்கை கல்வி, சமுதாயத்தோடு ஒத்துபோவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT