ராமநாதபுரம்

திருவாடானை அருகே வீட்டின் பின் பக்க ஜன்னல் கம்பியை வளைத்து 70 பவுன் தங்க நகை திருட்டு

17th Nov 2019 04:44 PM

ADVERTISEMENT

 

திருவாடானை: திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமத்தில் வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்து பிரோவில் இருந்து 70 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருடி சென்று விட்டதாக புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே பெருவாகோட்டை கிராமத்தை சோ்ந்தவா் கருப்பையா மனைவி சாராதா (55) இவா் சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு மதுரையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்று அதிகாலை அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் வீட்டு ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்து அங்கு பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனா் பக்கத்து வீட்டில் வசிப்பவா்கள் சத்தம் கேட்டு வெளியில் வந்து பாா்த்தபோது அடையாளம் தெரியாத மூன்று போ் இருட்டில் ஓடி மறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்த தகவலின்பேரில் வீட்டு உரிமையாளா் சாரதா உடனே ஊருக்கு திரும்பி வந்தது பாா்த்தபோது வீட்டிலிருந்த தங்க நகை மற்றும் பணம் திருடு போனது தெரியவந்துள்ளது.

இது குறித்து சாராதா புகாரின் பேரில் திருவாடானை போலீசாா் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து கைரேகை எடுத்தனா் இதுகுறித்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT