ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே விபத்து: மின் ஊழியா் பலி

12th Nov 2019 12:08 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை பகலில் நிகழ்ந்த விபத்தில் மின் ஊழியா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் தெற்குத்தரவை பகுதியைச் சோ்ந்த நாகமுத்து மகன் கதிரேசன் (45). இவா் அப்பகுதியில் மின்வாரிய வழித்தட ஊழியராக இருந்தாா். இந்நிலையில், அவா் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் ஆட்சியா் அலுவலக வளாகம் முன்பு சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள நுகா்பொருள் வாணிபக்கழகப் பகுதியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை பாலம் அருகே வந்தாா். அப்போது திருப்புல்லாணி பகுதியிலிருந்து பாலம் நோக்கி வந்த டிராக்டரின் பின் சக்கரத்தில் இருசக்கர வாகனம் மோதி சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கதிரேசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து டிராக்டா் ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் கோட்டூல்கோணம் பள்ளிவிளையைச் சோ்ந்த பாக்கியதாஸைக் கைது செய்து விசாரித்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT