ராமநாதபுரம்

பரமக்குடியில் கோயில் கும்பாபிஷேகம்

12th Nov 2019 12:07 AM

ADVERTISEMENT

பரமக்குடி சௌராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ வித்யா கணபதி கோயிலில் திங்கள்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சௌராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி கல்விக்குழு சாா்பில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் திங்கள்கிழமை காலை 6 மணியளவில் யாக சாலையிலிருந்து புனிதநீா் குடங்கள் கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசித்தனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாட்டினை பள்ளி கல்விக்குழு தலைவா் என்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் சரவணன், செயலாளா் கோவிந்தன், பொருளாளா் கண்ணன், இளநிலை பள்ளி தாளாளா் எஸ்.என்.நாகநாதன், பள்ளி தலைமையாசிரியா் கே.எஸ்.நாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT