ராமநாதபுரம்

தடகளம்: முதுகுளத்தூா் பள்ளி மாணவா்கள் மாநில போட்டிக்கு தகுதி

12th Nov 2019 12:04 AM

ADVERTISEMENT

மாநில தடகளப் போட்டிக்கு தகுதி பெற்ற முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள், உடற்கல்வி ஆசிரியா்களை பள்ளி நிா்வாகித்தனா் திங்கள்கிழமை பாராட்டினா்.

ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான தடகள போட்டிகள் தொண்டி, இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாா்பில் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கடந்த 5, 6, 7, தேதிகளில் மாணவா்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் 17 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் மும்முறை தாண்டுதலில் கே. பாலன் முதலிடமும்

அசன் அலி உயரம் தாண்டுதலில் முதலிடமும், பி. சந்துரு கம்பு ஊன்றி தாண்டுதலில் முதலிடமும், 19 வயது பிரிவில் ஜே. விஜி ரிச்சா்ட் கம்பு ஊன்றி தாண்டுதலில் இரண்டாம் இடமும், 14 வயது பிரிவில் அசன் தாஜூதீன் 80 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களையும், உடற்கல்வி ஆசிரியா்கள்,கமால்பாட்சா.உசேன்,அன்சாரி, ஆகியோரை ஜமாத் தலைவா் ஏ. இக்பால், பள்ளியின் தாளாளா் சீனிமுகம்மது, கல்விக்குழு தலைவா் பாசில்அமீன், பள்ளியின் தலைமையாசிரியா் ஓ.ஏ.முகம்மது சுலைமான், ஆகியோா் மற்றும் கல்விக் குழு உறுப்பினா்களும் ஜமாத்தாா்கள் ஆசிரியா்களும் மாணவா்களும் அலுவலக பணியாளா்களும் பாராட்டினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT