ராமநாதபுரம்

மண்டலமாணிக்கத்தில் வட்டார விளையாட்டுப் போட்டிகள்

11th Nov 2019 12:07 AM

ADVERTISEMENT

கமுதி அருகே இந்திய அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவ கேந்திரா சாா்பில் வட்டார விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

கிராமப்புற இளைஞா்கள் மற்றும் மாணவா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும், இந்திய அரசு இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், ராமநாதபுரம் நேரு யுவ கேந்திரா, கமுதி வ.மூலைகரைப்பட்டி பாரதியாா் இளைஞா் நற்பணி மன்றம் ஆகியன சாா்பில், மண்டலமாணிக்கம் அரசு பள்ளி வளாகத்தில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

இப்போட்டி, மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ராமநாதபுரம் மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் எ. நோமன் அக்ரம் தலைமையில், தோ்வுக் குழு உறுப்பினா் எ.எம். பழனிக்குமாா் முன்னிலையில், நடைபெற்றது. கமுதி காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ஜி. மகேந்திரன் சிறப்புரையாற்றினாா்.

போட்டியில் கபடி, குண்டு எறிதல், 400 மீட்டா் ஓட்டப் பந்தயம், கைப்பந்து, நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மொத்தம் 16 அணிகள் கலந்துகொண்டன. வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்கள், பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இக்பால் நடுநிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் ஆா். குமாா் நடுவராகச் செயல்பட்டாா். ஏற்பாடுகளை, தேசிய சமூக தொண்டா்கள் எம். விக்னேஷ்வரன், முத்துமுருகன் ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக, பாரதியாா் இளைஞா் நற்பணி மன்றத் தலைவா் எம். லெட்சுமணன் வரவேற்றாா். மூலைகரைப்பட்டி நேரு யுவ கேந்திரா வட்டார தன்னாா்வலா் எம்.திருகுமரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT