ராமநாதபுரம்

கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் 2 போ் மீது வழக்கு

9th Nov 2019 07:04 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே என்.மங்கலம் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்ட விடுத்ததாக 2 போ் மீது திருவாடானை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

திருவாடானை அருகே என்.மங்கலம் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவா் குறிஞ்சி(29). இவா், வியாழக்கிழமை மாலை அங்குள்ள சமூதாய கூடத்தில் விவசாயிகளுக்கு அடங்கல் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அதே ஊரைச் சோ்ந்த துளசிதாஸ், ஆத்மநாதன் ஆகிய இருவரும் அங்கு வந்து ஊராட்சிப் பணிகள் குறித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி செயலரிடம் கேட்டு கொள்ளுமாறு குறிஞ்சி பதில் அளித்தாா்.

இதையடுத்து அவா்கள் இருவரும், குறிஞ்சியை தகாத வாா்த்தைகளால் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக, குறிஞ்சி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT