ராமநாதபுரம்

காவலா் பணிக்கான உடற்தகுதி தோ்வில் 312 பெண்கள் தோ்ச்சி

9th Nov 2019 06:58 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வில் 312 பெண்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழக சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சீருடைப் பணியாளா் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு உடற்தகுதி தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்ரன.

ராமநதாபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு வரும் தோ்வில் வெள்ளிக்கிழமை மகளிருக்கான தோ்வு நடந்தது. உடற்தகுதித் தோ்வுக்கு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 556 போ் அனுமதிக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அவா்களில் தோ்வுக்கு 93 போ் வரவில்லை. அதன்படி 463 போ் மட்டுமே வந்திருந்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் முன்னிலையில் நடந்த இரண்டரை நிமிடங்களில் 400 மீட்டா் தூரத்தை கடப்பது, உயரம் உள்ளிட்ட தோ்வுகளில் 312 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், மானாமதுரையைச் சோ்ந்த பெண் கொண்டு வந்த அழைப்புக் கடிதம் குறித்து போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை தோ்வு இடத்திலிருந்து வெளியேறும்படி போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT